குடிபெயர்வு
இடையில் எட்டிப் பார்க்க முடியாதபடி ஒரு வருடம் கடந்துவிட்டது. நகரத்தில் முன்கூட்டி முழுவருட விடுமுறைக்கு பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுகிறார்கள். கிராமத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, இங்கு பள்ளிக்கூடம் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதை சீனிவாசன் கண்டான்.
இடதுகை மடிப்பில் மார்போடு தழுவிப் புத்தகக் கட்டு, அத்தனை லாவகமாய்ச் சுமையைப் பெண்ணால் மட்டுமே சுமக்க முடியும்; இந்த ஒரு சுமை மட்டும்தானா? எல்லாச் சுமைகளும் அவர்களைக் கழுத்து ஒடியச் செய்கின்றன என சீனிவாசன் நினைத்தான்.பள்ளி தொடங்கியிருந்தது. முதல்வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்புக்கு நீண்டு அகன்ற கண்மாய்க் கரை மேல் வந்தாள் சௌந்தரம். வெள்ளைச் சீருடை. சூரியோதயத்திலிருந்து பெயர்த்து வந்த ஒளித்தகடு போல் கரைமேல் தெரிந்தாள். சந்திப்பை சீனிவாசன் எதிர்பார்க்கவில்லை. அவன் வந்தடைந்த சேதி அவளுக்கும் கிட்டியிருக்கிறது. முகம் ஆச்சரிய