மாற்று அரசியலை வழிமறிக்கும் வன்மங்கள்
'தேசசத் துரோகிகளின் கூடாரம்’ என்று இந்துத்துவ மதவாதிகளால் விமர்சிக்கப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துச் சுதந்திரம், கலாச்சாரச் சுதந்திரம் போன்ற தனிமனிதச் சுதந்திரக் கட்டமைப்பைக் கொண்டு இயங்குகிறது அப்பல்கலைக்கழக வளாகம். இங்கு உருவாகும் புரட்சிகரச் சிந்தனைகளையும் எழுச்சிமிகு போராட்டங்களையும் அறிவுசார் வாதங்களையும் கருத்தியல்சார் அரசியலையும் முன்னெடுத்துச் செல்லும் மாணவர்களின் செயல்பாடுகள் மக்களவை, மாநிலங்களவைகளிலும் விவாதப் பொருளாக இருந்துவருகின்றன; இதன்மூலம் நாடு தாண்டிய கவனத்தையும் ஜேஎன்யு பெற்றுள்ளது.
2016 பிப்ரவரி 9 அப்சல் குருவின் நினைவு தின அனுசரிப்பில் மாணவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டதாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் தேசத் துரோகிகளாகச்