ஒரே பெண்ணுக்குச் சொல்லப்பட்ட இரு கவிதைகள்
கவிதை1: காலங்கள் மூன்று
நிகழுங் காலம்
வாசனைகளால் ஞாபகங்கொள்ளப்படுகின்றவள்
சூழவும் முழுக்கக் கமழத்தொடங்கிய நாளிலொன்றில்
நகர் நீங்கிய தூரம் நெடும்
காலத்திலும் காதத்திலும்
இரண்டாங்காலம்
நகரில் ஒருக்காலம் அவள் அரசி
அவள் மட்டும்
ராவும்பகலும் உடைமாறி யணிந்து திரிகின்றோம்
சிலபோது ஒன்றை இருவரும்
பலப்போது அதுவுமற்று.
சின்னஞ்சிறு உலக மது.
சிறு உலகம் சற்றேறக்குறைய வருடங்கள் ஐந்து ஆயுளில்
அழிந்துபோன வேற்றுக் கிரஹம்
காதலும் கலவியும் மாத்திரம் பயிற்றும் பயிலும் கூடம்.
ஆயுள் அற்பத்துள் அனைத்தையும் வாழ்ந்து தீர்க்கிறோம்
நொடி நீளம் சூரிய வருடங்கள் ஐந்து
பகலைத் திரையிட்டு இருளவைத்திருந்த இளநீல