அவல நகைச்சுவையும் கண்ணியமும்
பெஸண்ட்நகர் ஸ்பேசஸில் நடந்த கூட்டத் துக்கு, அசோகமித்திரனை பைக்கில் அழைத்துச் செல்ல அவர் இருந்த வேளச்சேரி வீட்டிற்குச் சென்றிருக்கிறார் கடற்கரய். அப்போதே அவருக்கு வயது 70ஐயும் தாண்டியிருந்தது. அந்த பைக்கில் அவர் பின்னால் ஏறி உட்காருவதற்குள்ளாக, அவருக்கு நன்றாக வண்டி ஓட்டத் தெரியுமா என்பதில் தொடங்கி ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார் அசோகமித்திரன். அவரைக் கூட்டிவந்து பெஸண்ட்நகரில் சேர்ப்பதற்குள்ளாக, அவர்களுக்குள் நடந்த உரையாடலை பாம்பன்விளையில் நடந்த இலக்கியக் கூட்டத்தில், அசோகமித்திரனைப் போலவே நடித்துக் காட்டியிருக்கிறார் கடற்கரய். அந்த மிமிக்ரியின் தொடக்கத்தில் இருந்து குழுமியிருந்த அனைவரும் விழுந்து புரண்டு சிரிக்காத குறையாக ரசித்திருக்கிறார்கள்.
வண்டி, தரமணியைத் தாண்டும்போது, நடைபாதையில் பீகார் ஒரிஸாவிலிருந்து வந்திருந்தவர்கள் பொம்மைகளைக் கடை பரப்பி இருந்த