மேன்மைக் கலைஞன்
தமிழின் முதன்மையான எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் என்பது வெறுந் தகவல் அல்ல. அது வாழ்விலே ஒரு முறைதான் நிகழக் கூடியது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு நிகழ்வு ஒன்றில் அவரைக் கடைசியாகச் சந்தித்துப் பேசியபோது, 1983இல் நான் அவர் வீட்டுக்குச் சந்திக்கச் சென்றமை பற்றி நினைவு கூர்ந்தார். ‘பயங்கரமான காலம் வரப் போகிறது. எப்படித்தான் நீங்கள் எல்லாம் தப்பிப் பிழைக்கப்போகிறீர்களோ என்று யோசிக்கப் பயமாக இருக்கிறது. பேசாமல் இங்கேயே இருந்துவிடுங்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எல்லாம் கேட்கவா போகிறீர்கள்?” என்று அவர் அந்தச் சந்திப்பில் சொன்னதை மறக்க முடியாது. ஈழத்து இலக்கியர்கள், போராளிகள் என்று பலர் அவரைச் சந்தித்திருந்தனர். எல்லோருக்கும் அவர் இப்படித்தான் சொல்லியிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
அசோகமித்திரன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அவருடை