ஃபாரூக் படுகொலை:நம்பிக்கையும் பகுத்தறிவும்
கோவையில் நிகழ்ந்த திராவிடர் விடுதலைக்கழகத் தோழர் முகம்மது ஃபாரூக்கின் படுகொலை தமிழகத்தில் முற்போக்கு சக்திகளிடையே மிகப்பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இப்படுகொலை நடத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு புறம் பெரியாரிய இயக்கத் தொண்டர்களுக்கும் மறுபுறம் இஸ்லாமிய இளைஞர்களுக்கும் மிகப்பெரும் கருத்து மோதல் சமூக வலைத் தளங்களில் நடக்கிறது. இப்படுகொலையை முற்போக்கு இஸ்லாமிய சக்திகள் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கின்றன. கொலை செய்தவர்கள் சமூக விரோதிகள் எனவும் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல எனவும் சொல்லியிருக்கிறார்கள். முற்போக்கு இஸ்லாமிய இளைஞர்கள் பலரும் படுகொலைக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இக்கொலையைச் சாக்கிட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தை விமர்சிப்பதையும் கண்டனம் செய்திருக்கிறார்கள்.