பெண்விடுதலை பேசும் பிரஞ்சு குறுநாவல்கள்

சூறாவளி
(இரு குறுநாவல்கள்)
லெ. கிளெஸியோ
தமிழில்: க.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில் -1
பக்கம்: 192
விலை: ரூ.175
‘சூறாவளி’, ‘அடையாளத்தைத் தேடி அலையும் பெண்’ என்ற இரு குறுநாவல்களின் மொழிபெயர்ப்பாக இத்தொகுதி அமைந்துள்ளது.
முதல் குறுநாவல், ‘பிலிப்கியோ’ என்ற பயணர் ஒருவரின் வாழ்வின் பின்நோக்காகவும் அதே நிலையில் சமகால வாழ்வின் ஓட்டமாகவும் பின்னிப் பிணைந்ததாகும்.
பிலிப்கியோ - இந்த நாவலாசிரியரின் பிரதி என்பதை உணர முடிகிறது.
யூதோ தீவை விட்டுச்சென்று முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரும்பிவரும் பிலிப்கியோ தன் முன்னைக் காதலி மேரியின் நினைவுகளோடு அலைகிறான். மேரி ஒரு சுற்