போய் வாருங்கள் அசோகமித்திரன்

வெகுஜன இதழ்களில் அசோகமித்திரன் எழுத்து களைப் பார்க்க நேரும்போதெல்லாம் எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். விழலுக்கு நீர் பாய்ச்சி ஏன் மாய்கிறார் இவர் என்று தோன்றும். இதற்கான பயன் பணஅளவிலும் சரி மதிப்பீடுகள் நிலையிலும் சரி, நியாயமான அளவு இருக்காதே என்று நினைப்பதுண்டு. ஆனால் அதன் பயன் Zero சதவீதம்தான்என்றும் சொல்லிவிட முடியாது. இலக்கியம் மீறிய வேறு காரணங்கள் இருக்கக்கூடுமோ, என்னமோ?
1980களில் குங்குமத்தில் வெளிவந்த கதை ஒன்றின் மூலம்தான் அசோகமித்திரன் எழுத்து எனக்கு அறிமுகமானது. குப்பைகளுக்கு இடையில் மாணிக்கம் பளிச்செனத் தெரிவது ஆச்சர்யமல்ல. ஏதோ சிறைச்சாலை சம்பவம் அதில் வரும். இதைத்தவிர கதையின் பெயரோ வேறு எதுவுமோ எனக்கு நினைவில் இல்லை. கூரான அனுபவம். எளிமையான சொற்கள், வார்த்தையாக வெளிப்படாத உணர்வு. அந்த அனுபவம், வித்தியாசமாக இருந்து என்னைத் தீவிர எழுத்துக்க