உலகப் பெருவெளி
உலகப் புகழ்பெற்றவரான சிற்பி எஸ். நந்தகோபால் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தனது எழுபத்தியோராம் வயதில் சென்னையில் காலமானார். வழக்கமான தமிழ் ஊடக தர்மத்துக்கு ஊறு நேராத வகையில் அவரது மறைவு தபால்தலை அளவு புகைப்படத்துடன் சிலவரிச் செய்தியாக வெளியானது. வழக்கம்போல ஆங்கில நாளிதழ்கள் அவரது கலையையும் வாழ்வையும் குறித்து விரிவாக எழுதி அஞ்சலி செலுத்தின. வாழ்நாளில் பெரும் பகுதியையும் சென்னையில் செலவிட்டவர் நந்தகோபால் என்பதால் இந்த அக்கறையின்மை உறுத்துகிறது.
இந்தியாவின் நவீன ஓவிய மரபுகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது மெட்ராஸ் பள்ளி. நந்தகோபாலை மெட்ராஸ் பாணியின் சந்ததிய