விடைபெற்ற கானசரஸ்வதி
கிஷோரி-தாய் என்று பிரியமாக அழைக்கப் பட்ட கிஷோரி அமோங்கர் தமது எண்பத்து நாலாம் வயதில் மறைந்துவிட்டார். இசையைப் பிழைப்புக்கான வழியாகக் கருதாத தலைமுறையின் கடைசி இலைகளில் இன்னொன்று உதிர்ந்துவிட்டது - சம்பிரதாயமான வார்த்தைகளில் சொன்னால், ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு! ஆனாலும், இரண்டு ஆறுதல்கள் உண்டு.
ஒன்று, பெருவாழ்வு வாழ்ந்து, கிளையிலேயே பழுத்து வதங்கி உலர்ந்து உதிர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூப்பின் காரணமாக செயலூக்கம் வெகுவாகக் குறைந்துவிட்ட பின்னணியில், அமர்ந்திருக்கும் சீடர்களைத் தன்னைவிட அதிக நேரம் பாட அனுமதிக்கும் நிகழ்த்துக் கலைஞரை நூறாண்டு வாழச் சொல்லி வற்புறுத்துவது நியாயமில்லை. அவருடைய ஆயுள் நீடிப்பதே நமக்கு விருப்பமானது என்றாலும், தளர்ச்சியும் செயலின்மையும் அன்னா ருடைய ஆழ்மனத்தில் என்னென்ன விதமான ஏக்கங்களை உருவாக்குமோ