பாலியல் நலம்
மூன்று விடயங்கள் மனிதருக்கு முக்கிய மானவையாக இருக்கின்றன: உணவு, உறவு, உணர்வு. தொடர்ந்து இரண்டு வேளை உணவில்லாமற் போனால் நாம் துவண்டுவிடுகிறோம். தொடர்ந்து இயங்கமுடியாமல் தவித்துப்போகிறோம். தொடர்ச்சியாகச் சில நாட்கள் உணவும் ஊட்டச் சத்தும் கிடைக்காமற் போனால் உயிர் வாழவே முடியாது.
“வயிறு, மனிதரை இட்டுச் செல்கிறது” எனும் ஆங்கிலப் பழமொழி உண்மைதான் என்றாலும், வயிறு நிறைந்ததும் நாம் நம் அருகே வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேட முற்படுகிறோம். காரணம், அடிப்படையில் நாமெல்லாம் சமூக மிருகங்கள். ஆங்கிலக் கவிஞர் ஜான் டன் சொன்னதுபோல, “எந்த மனிதரும் ஒரு தீவு அல்ல.” குடும்பம், சமூகம், உலகம் போன்ற உறவுகளின்றி மனிதன் ஓர் இயல்பான, நிறைவான வாழ்க்கை வாழ முடியாது.
முன்னவை போலவே உணர்வும் மிக முக்கியமானதாக இருக்கிறது. உணர்வுக்கு வடிகால் இல்லாமற் போவதால் ஓ