நேர்மையின் இயல்பு
அசோகமித்திரனை எழுத்துக்கள் மூலம் கிட்டத்தட்ட 40 வருடங்களாகப் பழக்கம். குடும்ப நண்பராக 34 வருடங்களாகப் பழக்கம். எழுத்து வேறு எழுத்தாளர் வேறு என்று இரட்டை முகமூடியோடு இயங்காத வெகு அபூர்வமான எழுத்தாளர்களில் அசோகமித்திரனும் ஒருவர். அவர் எழுத்து நம்மைச் செதுக்குவது போல், பழக்கமும் செதுக்கும்.
இதுவரை இலக்கியம் பற்றித் தனி நபர் சம்பாஷணைகளைத் தாண்டிப் பேசாத நான், அசோகமித்திரன் எழுத்துபற்றி என்னை மதித்த எல்லா இடங்களிலும் பேசி இருக்கிறேன். அதற்குக் காரணங்களாக நான் பார்ப்பது அவர் எழுத்தின் மேல் எனக்கிருந்த தீராத நம்பிக்கையும் படிக்கப் படிக்க என்னை நானே செதுக்கிக்கொள்ள அது உதவியது என்பதைத்தான்.
குடும்ப நண்பராக, அவருடனான தருணங்களைப் பகிர்ந்துகொள்ள, மற்றவர்களுக்கிருப்பதைப்போல் எனக்கும் நிறைய விஷயங்கள் இருந்தாலும் இது அதற்கான தருணம் இல்லை என்றே நினைக்கிறேன