பிப்ரவரி 2021
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மார்ச் 2021
    • தலையங்கம்
      இளையோரின் வெற்றி எளியோரின் வெற்றி
    • கதை
      வித்தை
      சாட்டை
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • அஞ்சலி: தொ. பரமசிவன் (1950-2021)
      அஞ்சலி: தொ. பரமசிவன் (1950-2021)
      தமிழரை வியக்க வைத்தவர்
      மக்கள் வாசிப்பு
      தென்கொள் திசைக்குத் திலகம்
      களஆய்வின் நிறைநிலை
      பண்பாட்டியல் களமும் கல்வியும்
      நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்...
      முரண்பாடுகளைக் கடந்த தோழமை
      எழுத்திலும் மிளிரும்
      'அறியப்படாத தமிழகம்': அறியப்படாத கதை
      பண்பாட்டுக் கதைச்சொல்லி
    • கட்டுரை
      தொடங்கும்போதே சிறை
      ‘கேளடா மானிடவா’
      பூமியினும் பொறை மிக்குடையார்
      அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி
    • நாவல் பகுதி
      மிஸ் ஜெபீன்
    • மதிப்புரை
      மொழியியல் விஞ்ஞானி சோம்ஸ்கி
    • அஞ்சலி: ஆ. மாதவன் (1934 - 2020)
      என் இலக்கியப் பயணம்
      உதிரிகளின் கதைஞர்
    • கவிதைகள்
      கவிதைகள்
      பெருநோய்க் காண்டம்
      கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • இரங்கல்
      ‘நர்மதா’ இராமலிங்கம்: ‘நல்ல நூல் வெளியீட்டாளர்’
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2021 தலையங்கம் இளையோரின் வெற்றி எளியோரின் வெற்றி

இளையோரின் வெற்றி எளியோரின் வெற்றி

தலையங்கம்

தலையங்கம்

இளையோரின் வெற்றி எளியோரின் வெற்றி

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேன் நகரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸின் 97ஆவது ஓவரை - கடைசிப் பந்தை ரிஷப் பந்த் லாங் ஆஃப் திசையில் அடித்தார். எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்ற அந்தப் பந்து அந்தப் போட்டியில் மட்டுமல்ல, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. போட்டி, தொடர் ஆகிய எல்லைகளைத் தாண்டிப் புதிய வரலாற்றையும் எழுதியது.

அரிதினும் அரிதான வெற்றி அது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அணிக்கு எதிராக அந்தந்த நாடுகளில் பெறும் வெற்றி எப்போதுமே சிறப்பானது. காரணம், அந்தந்த அணிகளின் இயல்பான வலிமையும் சொந்த மண்ணில் ஆடுகையில் அவை பெறும் கூடுதல் வலிமையும்.

ஆஸ்திரேலியாவில் இந்தியக் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றாலே பெரிய சாதனை என்றே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் இந்திய அணியோ டெஸ்ட் தொடரையே கைப்பற்றிக் கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்பும் டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்றிருக்கிறது. சுனில் கவாஸ்கர், கபில்தேவ், அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ஜாகீர் கான், வீரேந்திர சேவாக் போன்ற பல களம் கண்ட திறமைசாலிகளால் அது சாத்தியமாகியிருக்கிறது. அண்மைக் காலத்தில் விராட் கோலி போன்றோரால் அது நடந்திருக்கிறது. ஆனால், இந்த வெற்றி பல விதங்களிலும் மாறுபட்டது. முதன்மை அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் பெரும்பாலானோர் இல்லாமல் ஆடியும் கிடைத்த வெற்றி இது. அஜிங்க்ய ரஹானே, சேத்தேஸ்வர் புஜாரா போன்ற அனுபவசாலிகளுடன் புத்தம்புதிய ஆட்டக்காரர்களும் இணைந்து இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார்கள். 

இது இளையவர்களின் வெற்றி. எளியவர்களின் வெற்றி. நட்சத்திரங்களால் கிடைத்த வெற்றி அல்ல; சாமானியர்களால் சாத்தியமான வெற்றி.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில்  முப்பத்தாறு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து மிக மோசமான தோல்வியை இந்தியா பெற்றது. ஏற்கெனவே எடுத்த முடிவின்படி முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் அணித் தலைவர் விராட் கோலி தந்தைமை விடுப்பில் இந்தியா திரும்பினார். சமகாலத்தின் ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரான கோலி இல்லாத நிலையில் இந்திய அணி 4-0 என்னும் கணக்கில் தோற்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் வான் கணித்தார்; பெரும்பாலானவர்களும் அப்படியே நினைத்தார்கள்.

அடிலெய்டில் அப்பிக்கொண்ட கரி படர்ந்த முகங்களுடன் மெல்போர்னுக்கு வந்து சேர்ந்த இந்திய அணி இந்தக் கணிப்புகளை முறியடித்து இரண்டாவது போட்டியை வென்றது. சதம் அடித்த அணித் தலைவர் ரஹானே, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் புதியதொரு நபரின் பங்களிப்பும் அந்த வெற்றியில் இருந்தது. அவர் முகம்மது சிராஜ்.

சிராஜ் மட்டுமல்ல, இந்தத் தொடரில் சிறப்பாகப் பங்களித்த டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாகுர், நவ்தீப் சைனி, ஷுப்மன் கில் ஆகியவர்களும் புதுமுகங்கள்தான். தாகுரைத் தவிர மற்றவர்கள் இந்தத் தொடரில்தான் அறிமுகமானார்கள். தாகுர் இதற்கு முன்பே அறிமுகமானாலும் ஒரு போட்டியில் மட்டுமே ஆடினார். காயம் காரணமாகப் பத்தே பந்துகளில் வெளியேறினார். ஆக, இந்த ஐவருமே புதுமுகங்கள். வெற்றிக்கு முக்கியப் பங்களித்த ரிஷப் பந்த் இதுவரை பதினாறு போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். கடுமையான காயத்துடன் போராடி சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்குப் பெரும் பங்களித்த ஹனுமா விஹாரி பன்னிரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

ரஹானே, புஜாரா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் தொடரின் வெற்றிக்குக் கணிசமான பங்களித்தாலும் சிராஜ், சுந்தர், தாகுர், கில், பந்த் போன்ற இளையவர்களின் பங்களிப்பே வரலாற்றை மாற்றி எழுத உதவியது.

ஐந்து புதுமுகங்கள் இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, சோபிக்கவும் செய்திருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில், அதுவும் அந்நிய மண்ணில் இத்தனை புதுமுகங்களைக் கொண்ட அணி வெற்றி பெறுவது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே அரிதான நிகழ்வு.

விராட் கோலி வீடு திரும்பியதும் இந்தியாவின் தோல்விக் கதையை எளிதாக எழுத ஆஸ்திரேலிய அணியும் கிரிக்கெட் விமர்சகர்களும் தயாரானார்கள். ஆனால், அடுத்த போட்டியில் இந்திய அணி வென்றது. அதற்கடுத்த போட்டியைத் தோல்வியின் பிடியிலிருந்து மீட்டு நம்ப முடியாத வகையில் சமன் செய்தது.

எனினும் கடைசிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறாது என்றே பலரும் நினைத்தார்கள். காரணம், மூன்றாம் போட்டியில் விளையாடிய முக்கியமான வீரர்கள் விஹாரி, அஸ்வின், ஜடேஜா, பும்ரா உள்ளிட்டோர் நான்காம் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் காயம் காரணமாக மூன்றாம் போட்டியிலேயே ஆட முடியவில்லை. முக்கிய வீரர்கள் பலரும் இல்லாமல் விளையாடுவதற்குப் பதிலாகப் போட்டியை ரத்து செய்துவிட்டு இந்தியர்கள் தாய்நாடு திரும்பிவிடலாம் என்னும் குரல்கள் சமூக ஊடகங்களில் எழுந்தன.

அதே குரல்கள் இப்போது இந்திய அணிக்கு வாழ்த்துப்பா பாடிக்கொண்டிருக்கின்றன.

ஷுப்மன் கில் இறுதிப் போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 91 ரன் அடித்து வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். பந்த் 89 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். பந்த் மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக ஆடியிருந்தார். நடராஜன், சுந்தர், தாகுர் ஆகிய மூவரும் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர். சுந்தர், தாகுர் இருவரும் முதல் இன்னிங்ஸில் மட்டைவீச்சிலும் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தினார்கள். இருவரும் ஆளுக்கு அறுபதுக்கு மேல் அடித்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிகமாகப் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொண்டனர். இரண்டாம் இன்னிங்ஸில் சிராஜ் ஐந்து விக்கெட்களையும் தாகுர் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இந்தப் புதியவர்களின் எழுச்சி ஆடுகளத்தையும் ஆட்ட வரலாற்றின் பக்கங்களையும் தாண்டிய முக்கியத்துவம் கொண்டது. இவர்களில் பலர் சிறுநகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் எளிய பின்னணியைக் கொண்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். சேலம் மாவட்டத்தின் சின்னாம்பட்டியைச் சேர்ந்த நடராஜனின் தந்தை ஒரு நெசவாளி. தாய் சாந்தா சாலையோரக் கோழி இறைச்சிக் கடை நடத்திவருகிறார். சிராஜின் அறிமுகப் போட்டி தொடங்கும் முன்பு ஆட்டோரிக் ஷா ஓட்டுநரான அவருடைய அப்பா இறந்துவிட்டார்.  தந்தையின் இறுதிச் சடங்குக்காகத் தாய்நாடு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டாலும் சிராஜ் அப்படி செய்யவில்லை. தொடர் முடிந்து சொந்த ஊருக்குச் சென்றவுடன் நேரடியாகத் தந்தையின் கல்லறைக்குச் சென்று வெற்றியைச் சமர்ப்பித்திருக்கிறார். வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம். சுந்தர் வசதியற்ற நிலையில் நண்பர்களின் உதவியுடன் போராடிக் கிரிக்கெட் உலகில் முன்னேறத் துடித்தவர். ஷார்துல் தாகுர் மகாராஷ்டிரத்தின் சிற்றூர் ஒன்றைச் சேர்ந்தவர். நவ்தீப் சைனியின் அப்பா ஹரியானா அரசின் கார் ஓட்டுநர்.

இப்படி எளிய பின்னணியிலிருந்து வந்த வீரர்கள் அதற்காக எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. போட்டியில் விளையாடும் பதினொருபேர் கொண்ட அணியில் இடம்பெற இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததில் சூழ்நிலைசார் காரணங்களுக்கும் பங்கு உண்டு. முதல்நிலை வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால்தான் இவர்கள் இந்தப் போட்டிகளில் விளையாட முடிந்தது. கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டதோடு இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையையும் கூட்டியிருக்கிறார்கள். முதன்மை அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் இல்லாமலும் வெல்லக்கூடிய தன்மையே அணியின் ஒட்டுமொத்த வலிமையைச் சுட்டக்கூடியது. அந்தத் தன்மை இந்திய அணிக்கு இருப்பதை இந்த எளியவர்கள் மகத்தான முறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

களத்தில் இவர்கள் நடந்துகொண்ட விதமும் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறது. போட்டியின்போது தன்மீது நடத்தப்பட்ட இனவெறி, நிறவெறித் தாக்குதலை மிக முதிர்ச்சியுடன் கையாண்டார் சிராஜ். நடராஜன் எப்போதும் புன்னகையுடன் பதற்றத்தை வெளிப்படுத்தாமல் விளையாடினார். மெலிந்த உடல் கொண்ட சுந்தர் பந்துவீச்சுச் சுழலில் ஆஸ்திரேலிய மட்டையாளர்களைப் பதம் பார்த்ததோடு மட்டைவீச்சில் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த வேக வீச்சாளர்களை மிகவும் லாவகமாக எதிர்கொண்டு விளையாடினார். கடைசிநாளின் கடைசிக் கட்டத்தில் கம்மின்ஸின் எகிறு பந்தை அவர் புல் செய்த விதம் அமைதியான இந்த மனிதருக்குள் இருக்கும் போர்க்குணத்தை வெளிப்படுத்தியது.

மேட்டுக்குடியினரின் மூடுகளமாகவே ஒருகாலத்தில் இருந்த இந்தியக் கிரிக்கெட் எளியவர்களும் நுழையக்கூடிய பரந்த ஆடுகளமாக ஆனதன் விளைவே இத்தகைய வெற்றி. சச்சின், ராகுல் போன்ற உலகின் சிறந்த ஆட்டக்காரர்களில் சிலரைக் கொண்ட முந்தைய அணிகள்கூடப் பெறாத அளவில் நம்ப இயலாத வெற்றிகளைப் பெற்று வரலாறு படைத்த இந்த இளையவர்களின், எளியவர்களின் அணி நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனை இந்தியக் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது!

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.