எழுத்திலும் மிளிரும்
எழுத்திலும் மிளிரும்
பா. மதிவாணன்
பேரா. தொ. பரமசிவன், ‘அழகர் கோயில்’ என்னும் தலைப்பிலான தம் முனைவர் பட்ட ஆய்வை 1979இல் முடித்தார். அது 1989இல் நூலாக வெளிவந்தது ; தமிழ்த் துறையாளர், நாட்டுப்புறவியலாளரிடையே அறிமுகமாயிற்று; ஆனாலும் பரவலாக அறியப்படவில்லை.
“தொ.ப.வின் எழுத்துகளை மட்டும் படித்தவர்களின் மதிப்பீட்டிற்கும் அவருடன் நேர்ப் பழக்கம் உள்ளவர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ள இயைபின்மை எனக்கு உறைத்ததுண்டு. நேராக அவருடன் பழகத்தொடங்கியபிறகே நண்பர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது (‘அணிந்துரை’, ‘அறியப்படாத தமிழகம்’, ப.14.) என