நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்...
நண்பனாய்... நல்லவனாய்... சேவகனாய்
நா. மம்மது
நன்றி: றஷ்மி
1968 காலகட்டம். நான் நெல்லை ம.திதா. இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் கணிதம்; தொ.ப. முதுகலை. என்னால் மூன்று ஆண்டுகாலம் படிப்பைத் தொடரமுடியவில்லை. என்னிலும் வயதில் மட்டும் ஐந்து ஆண்டு பின்தங்கியவர் தொ.ப. ஆனால் அறிவுப் புலத்தில் முந்திக்கொண்டுவிட்டார்.
அது ஒரு பொற்காலம். அப்போது பெரிய அறிவுச் சுற்றம் சூழ நெல்லையில் வலம் வந்தோம். எங்கள் முதல் ஆசான்; பேரன்பு கொண்டு எங்கள்மீது பாச மழை பொழிந்த பாளை. சிசு. மணி அண்ணன், சாத்தான்குளம் இராகவன், பேரா. வளன்அரசு, லூர்துசாமி, தொ.