பூமியினும் பொறை மிக்குடையார்
கட்டுரை
பூமியினும் பொறை மிக்குடையார்
சுகுமாரன்
சமகால மலையாளக் கவிஞர்களில் சுகதகுமாரியைப்போல நற்பேறு பெற்றவர்கள் அதிகமில்லை. எந்நேரமும் கவிதையுடன் வாழ அனுமதிக்கும் உலகியல் வசதிகளுக்காக ஏங்கும் கவிஞர்களுக்கிடையில் கொடுப்பினையான வாழ்க்கை அவருக்கு இயல்பாகவே வாய்த்தது.
சுகதகுமாரி (1934 - 2020) செல்வாக்கு மிக்க நாயர் தறவாட்டில் பிறந்தார். தந்தை போதேஸ்வரன் விவேகானந்தர், நாராயணகுரு, சட்டம்பி சுவாமிகள் ஆகிய ஆன்மீக, சீர்திருத்தக்காரர்களின் வழித் தோன்றலாகவும் காந்திய அறவழியில் நின்ற விடுதலைப் போராட்ட வீரராகவும் காந்தியத் தொண்டராகவும