என் இலக்கியப் பயணம்
அஞ்சலி: ஆ. மாதவன் (1934 - 2020)
என் இலக்கியப் பயணம்
ஆ. மாதவன்
‘கடைத்தெருக் கலைஞன்’ எனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் செல்லப் பெயரில் குறிப்பிடப்படும் ‘கலைமாமணி’ ஆ. மாதவன் 5.01.2021 அன்று திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவினால் காலமானார். மறுநாள், தைக்காடு மயானத்தில் கேரள அரசு மரியாதையுடன் அவரது இறுதிப் பயணம் நிறைவுற்றது இது. கேரள மண்ணில் தமிழ் எழுத்தாளருக்குக் கிடைத்த மரியாதை.
ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கும் மேலாகப் படைப்புலகில் அமைதியாகவே பணியாற்றி வந்தவருக்கு ‘இலக்கியச் சுவடு