தமிழரை வியக்க வைத்தவர்
தமிழரை வியக்க வைத்தவர்
பழ. அதியமான்
ஆ.இரா. வேங்கடாசலபதி (சலபதி) மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் (1995-2002) அவர் பேச்சுகளில் அடிக்கடி ஒலித்த பெயர்கள் சி.சு. மணி, தொ.ப., வே. மாணிக்கம், கா.அ. மணிக்குமார் ஆகியவை. என்னுடனான தனிப்பேச்சுகளில் தொ.ப.வைப் பற்றிப் பேசிய தருணங்களில் சலபதியின் குரல் வியப்பில் கவிழும். “உரையாடும்போது அவரிடமிருந்து தெறிக்கும் கருத்துகளும் சான்று மேற்கோள்களும் வாழ்ந்துபெற்ற பட்டறிவும் உடனுரையாடுபவரை மலைப்பில் ஆழ்த்தக்கூடியன. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளியைப் பாய்ச்சுவதும், பழகிப் பழகிப் பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று