கவிதைகள்
கவிதைகள்
சாகிப்கிரான்
இணைபிரபஞ்சம்
சோப்புக் குமிழை ஊதுகிறாள்.
உற்சாகம் கொப்பளிக்கிறது.
எண்ணிலடங்கா பிரபஞ்சங்களை ஒப்புவைக்கிறாள் குழந்தை.
கடவுள் இமைக்கத் துவங்குகிறார்.
நெருக்கமான தெருவின் ஓரத்தில்
நித்திய ஆமையொன்று முதல் பிரபஞ்சத்தை உடைக்கிறது.
தெறிக்கும் கடவுள் துகள்களில்
ஒரு கணம் தன் கண்களைக் கசக்குகிறாள் தேவதை.
பற்பல பிரபஞ்சங்களின் மாடி மாடத்தில் தலைக் கோதும் பிரேமா
வண்ணங்களில் சிரிக்கிறாள்.
உற்றுப்பார்க்கும்போதுதான் தெரிகிறது ஒரு பிரபஞ்சம்போல் மற்றொன்றில்லை.
ஒன்றில் நானில்லாத ஒருவன் ம