'அறியப்படாத தமிழகம்': அறியப்படாத கதை
‘அறியப்படாத தமிழகம்’: அறியப்படாத கதை
ஆ.இரா. வேங்கடாசலபதி
தொ. பரமசிவன் பற்றி முதலில் அறிய நேர்ந்தது அவருடைய ‘சீடர்’, சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர், மறைந்த பேராசிரியர் பார்ணி பேட் (Bernard Bate) வாயிலாக. நேரில் சந்தித்தது 1995 பிற்பகுதியில் அவர் இதயத் தாக்குதலுக்கு உள்ளாகி மதுரை மருத்துவமனையில் இருந்தபொழுது. ’அறியப்படாத தமிழகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிக்கொண்டிருந்த தொடர் கட்டுரைகளைப் பற்றி உற்சாகத்துடன் எனக்கு முதலில் அறிவித்தவர் சுந்தர் காளி.
‘அறியப்படாத தமிழகம்’ கட்டுரைகளைப் படித்ததும் ஏற்பட்ட கிறக்கம் மறக்க முடியாதது. அதன் மீதூரலைத் ‘தமிழியல் ஆய்வின் புதிய களங்கள்’ என்ற