‘நர்மதா’ இராமலிங்கம்: ‘நல்ல நூல் வெளியீட்டாளர்’
இரங்கல்
‘நர்மதா’ இராமலிங்கம்: ‘நல்ல நூல் வெளியீட்டாளர்’
ஆ.இரா. வேங்கடாசலபதி
இரண்டாம் உலகப்போர்க் காலத்தையொட்டித் தமிழ்ப் பதிப்புத்துறையில் ஒரு பெருமாற்றம் ஏற்பட்டது. நாட்டுக்கோட்டை நகரத்தாரின் மூலதனம் நூல் வெளியீட்டில் நுழைந்த தருணம் அது. நவீனத் தமிழ்ப் பதிப்புத்துறையின் தோற்ற காலம் என்று இதைக் குறிப்பிடலாம். சக்தி காரியாலயம், பாரி நிலையம், ஸ்டார் பிரசுரம், தமிழ்ப் புத்தகாலயம், தமிழ்ப் பண்ணை, முல்லைப் பதிப்பகம், சாந்தி நூலகம் என்று 1940களிலிருந்து ஒரு வளமான மரபு தொடங்கி அதற்கடுத்த இரண்டு பதிற்றாண்டுகளில் தேங