மக்கள் வாசிப்பு
மக்கள் வாசிப்பு
க. சுபாஷிணி
மன்னர்களின் செயற்பாடுகளை ஆய்வு செய்வதே வரலாறு என்ற பொதுப்படையான சிந்தனைப் போக்கிற்கு மாற்றுப்பாதை அமைத்து, மக்களின் வரலாற்றை ஆராய்வதன் வழி வரலாற்றைச் சரியாகப் பதிவுசெய்து இயங்கிக்கொண்டிருக்கும் மானுடவியல் ஆய்வுத் தளத்தில், தமிழகச் சூழலில், குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்.
தொல்லியல் அகழ்வாய்வுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் சிற்பங்களிலும் பொதிந்துகிடக்கின்ற செய்திகளை ஆராய்வது தமிழினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளப் போதுமானதன்று; மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்கின்ற, நாட்டார் கதைகளும் இசை, நடன, கூத்த