அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி
கட்டுரை
அம்பேத்கர் விரும்பிய தேசிய அலுவல்மொழி
ச. பால்ராஜ்
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிய கருத்து வெளிப்பட்டது. மாகாணங்கள் மொழிவாரியாக அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோதுதான் தேசிய அலுவல்மொழி (National Official language) குறித்தான கருத்தாக்கமும் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பிற்குப் பிறகு, இந்திமொழி அலுவல் மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் அம்பேத்கருக்கு மாறுபட்ட கருத்து இருந்துள்ளதை அவரின் தேசிய மொழிவாரி மாகாண அமைப