உதிரிகளின் கதைஞர்
உதிரிகளின் கதைஞர்
கே.என். செந்தில்
“ஒழுக்கம், பண்பு, வரைமுறை, பாபம், நீதி, அழகு, பணம், பாலீஷ் இதுகளுக்கெல்லாம் மேலாக மனநிலைகளின் வக்ரபோக்கு என்ற ஒன்று மனித ஏற்பாட்டில் நடைமுறையிலிருக்கிறது. மனிதன் ஜீவராசிகளில் எல்லாம் உயர்ந்தவனாக இருப்பதினால் மட்டுமே ஜீவராசிகளில் எல்லாவற்றையும்விட கழிசடையாக வாழ்கிறான்.”
- ஆ. மாதவன் (’வெறுப்பு’ கதையில்).
மிகச்சரியாக ஆ. மாதவன் பிறந்த (1934) அதே ஆண்டில் புதுமைப்பித்தனால் எழுதப்பட்ட கதையொன்றில் (சங்குதேவன் தர்மம்) வழிப்பறி செய்யும் மறவனைக் கண்டு ஊரே அஞ்சுகிறது. அவனைப் பார்த்திராத கிழவி தன் ம