கவிதைகள்
கவிதைகள்
கருணாகரன்
சாவைக் கண்டு அஞ்சுவோரெல்லாம் இந்தப் பக்கம் வாருங்கள்
என்று பயிற்சியாளர் அழைத்தபோது
கண்களைக் கசக்கிக்கொண்டு முன்வந்த கவிஞனுக்கு
வயது ஐம்பத்தாறு.
இன்றும் உள்ளத்தை உருக்கிக் காதல் கவிதைகளை
எழுதிக்கொண்டிருக்கிறான்
அந்தக் கவிதைகளில் விளையும் வாசனைத்திரவியங்கள்
அவனுடைய காதலிகளைத் தேடி உலகம் முழுதும் பரவுகின்றன
வாசனையிலானதொரு உலகத்தை உண்டாக்கும் மூர்க்கத்தோடுலவும்
அந்தக் கவிதைகளைச் சூடிக்கொண்டு போகிறாள் ஒரு காதலி
அந்தக் கவிதைகளைப் படுக்கையாக்கிக் கனவில் மிதக்கிறாள் ஒருத்தி
அந்தக் கவிதைகளைப் பானமாக்கிக் குடிக்கிறாள் இன்னொர