வித்தை
கதை
வித்தை
களந்தை பீர்முகம்மது
ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
எத்தனை முறை இதுபோன்ற கதைகளை நான் கேட்டிருக்கிறேன்? அப்படித்தான் இந்தக் கதையும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் மாதவன் சொல்கிற இந்தக் கதையில் ஏதோ உண்மையிருப்பதாக என்னுள் பட்சி சொல்லியது.
வாரத்திற்கொரு முறையாவது மாதவன் இந்தக் கதைகளைக் கூறிக்கொண்டிருந்தான். நான் நாக்கில் எச்சிலூறக் கேட்டுக்கொள்கிறவனாய் ஆகிப் போனேன். இவன் வேலையை விட்டு வீட்டுக்குப் போனதும் அவனின் மதினி முன்னே வந்து நின்றுவிடுவாளாம். “பாய், நல்ல கனத்த முல