பெருநோய்க் காண்டம்
கவிதைகள்
பெருநோய்க் காண்டம்
பா. அகிலன்
மிலான் 2020 - மார்ச்
‘போ’ ஆற்றின் கழிமுகத்தில்
மின்னும் புனைவாடைகளில் இருந்து விரைந்து வெளியேறும்;
வர்ணங்களைக் கட்டுப்படுத்த முன்பதாக
மதுக்குவளைகளைக் கவிழ்ப்பதற்கும்
நறுமணத் தைலங்களோடு
வியர்வை சேர்ந்து முயங்கும் முத்த உதடுகளை
பிரித்தெடுப்பதற்கும் முன்பதாக
மிலானின் மேல் மரணம் தன் இறக்கைகளை அகல விரிக்கிறது
பலகணிகளில்
வயதில் மூத்த மதிற் சுவர்களில்
யூதாசின்1 முப்பது வெள்ளிக்காசுகள் முளைத்து
மறைகையில்
விரைந்து தாழிடப்படும் நகரங்களை வீதிகளை வீடுகளை
அடரும் கரும்புகை உண்ணத் தொடங்குகிறது.
துர்ச்செய்திகளால் பிணங்களால் அழுகுரல்களால்
பன்நூற்றாண்டு