முரண்பாடுகளைக் கடந்த தோழமை
முரண்பாடுகளைக் கடந்த தோழமை
ச. தமிழ்ச்செல்வன்
திருநெல்வேலிக்கு ம.சு. பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக அவர் வந்து இணைவதற்கும் முன் அவரை எனக்குத் தெரியாது; கேள்விப்பட்டது கூடக் கிடையாது. தோழர் ஆ.இரா. வேங்கடாசலபதி கொடுத்த ‘அறியப்படாத தமிழகம்’ வாசித்து உளம் சிலிர்த்து நின்ற ஒருநாளில் சலபதிதான் தொ.ப. வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைத்தார். அப்போது சலபதியும் ம.சு.பல்கலையில் இருந்தார். பாளையங்கோட்டையில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். நானும் பாளையங்கோட்டை அஞ்சலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொ.ப. வீடும் பாளை தெற்கு பஜாரில் இருந்தது. ம.சு. பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டடம் இன்னும் தயாராகாமல் இருந்தது. பல்கலையின் பல