தென்கொள் திசைக்குத் திலகம்
தென்கொள் திசைக்குத் திலகம்
இரா. இலக்குவன்
1999. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, பாளையங்கோட்டை சாப்டர் ஹாலில் உள்ள சிறிய கட்டடத்தில் இயங்கியது. முதல்நாளன்று அங்கே முதுகலைத் தமிழ் சேர்வதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். எண்ணெய் தேய்த்து வாரிய தலையோடு மிதிவண்டியில் வந்து இறங்கிய துறைத் தலைவர் தொ. பரமசிவன், ‘எங்கே இளங்கலை படித்தீர்கள்?’ என்று கேட்டார். ‘மேலைச்சிவபுரி’ என்றவுடன் அவர் முகம் விரிந்தது. தொல்காப்பியத்திலோ நன்னூலிலோ நூற்பா எதாவது கேட்டுவிடுவாரோ என்ற எண்ணத்தில் பின்தொடர்ந்தேன்.
‘மேலைச்சிவபுரிக்கும் திருநெல்வேலிக்கும் நிறைய வித்தியாசங்