பண்பாட்டியல் களமும் கல்வியும்
பண்பாட்டியல் களமும் கல்வியும்
ஆ. திருநீலகண்டன்
தொ. பரமசிவன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ம.தி.தா. இந்துக்கல்லூரியில் உடன் பணியாற்றும் த. கண்ணா கருப்பையா. மதுரை தியாகராசர் கல்லூரியில் தொ.ப.வின் மாணவர் அவர். 1995ஆம் ஆண்டின் நடுவில், ஒருநாள் மதுரை சென்று தொ.ப.வைச் சந்தித்தோம். அவர் தங்கியிருந்த விடுதி அறையிலும் அவரது நெருங்கிய நண்பர் வி. மாறனின் அன்பு அச்சகத்திலும் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தன.
பாளையங்கோட்டையில் இருந்த தனது குடும்பத்தைப் பார்க்கச் சனி, ஞாயிறுகளில் தொ.ப. வரும் வேளைகளில் அவரது வீட்டிலும், அவரது குருநாதரும் ஞானத் தந்தையுமான சி.சு. மணி அவர்களின் வீட்டிலும் அவரைச் சந்திப்பேன். சி.சு. மணி அவர்களுடன் உரையாடும்போது பணிவும் கற்றல் ஆர்வம்மிக்க ஒரு சீடனின் உ