தொடங்கும்போதே சிறை
கட்டுரை
தொடங்கும்போதே சிறை
எம். பௌசர்
அஹ்னாப் ஜெசீம்
மே 2020இல் இருபத்தாறு வயது இளைஞர் ஒருவர், இலங்கை அரசாங்கத்தினால் ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்’ கைது செய்யப்பட்டிருந்தார். அப்படி ஒரு கைது நடந்துள்ளதும், கைதுக்கான காரணமும் வெளியுலகுக்குத் தெரிய ஆறு மாதங்கள் எடுத்தன. இலங்கையைப் பொறுத்தவரை இது ஆச்சரியப்படும் செய்தி இல்லை. பயங்கரவாதச் சட்டத்தினைப் பயன்படுத்தித்தான் இலங்கை அரசு, ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்து, நீதிமன்றங்கள் முன் நிறுத்தாது பல வருடங்களாக சி