சாட்டை
கதை
சாட்டை
எம். ரிஷான் ஷெரீப்
அடிவயிற்றில் சிவப்பைக் கொண்ட சாம்பல் குருவியொன்று இலைகளுதிர்ந்த மரக் கிளையொன்றில் நின்று அங்குமிங்கும் பார்க்கிறது. அதன் பாடல் மறந்துபோய்விட்டதா அல்லது தனது துணையைத் தேடுகிறதாவென்று தெரியவில்லை. எங்கோ ரயிலொன்று தடதடத்து ஓடும் ஓசை கேட்டது. அருகாமையில் எங்கும் ஒரு தண்டவாளம் கூட இல்லை. எனினும் குளிர் பனிக் காலங்களில் மலைப் பிரதேசங்களிலோடும் ரயிலின் ஓசை தாழ்வாரம்வரை கேட்கும். ஒரு காலத்தில் மலைப் பயிர்களான தேயிலை, கிராம்பு, சாதிக்காய், மிளகு எனப் பலவற்றையும் நகரங்களுக்குக் கொண்டுசெல்ல வந்து போன சரக்கு ரயில்