கவிதைகள்
கவிதைகள்
பாதசாரி
ஒற்றைக் குட்டிச் செருப்பு
மாநகர நெடுஞ்சாலையில்
இருசக்கர வாகனத்தின்
பின்னிருக்கையில்
தாய்மடியமர்ந்து சென்ற
குழந்தையின்
பச்சைக்கிளி நிற ஒற்றைக் குட்டிச் செருப்பு
நட்டநடு ரோட்டில் கிடக்கிறது.
காணாததான ஒற்றைக் குட்டிச் செருப்பை
வீட்டில் போய்த்தான் கவனிப்பார்களாயிருக்கும்
குழந்தையை (செல்லமாக) திட்டுவார்களோ
ச்சே..ச்சே..இருக்காது
இது மூணாவது தடவை புள்ளே - என கணவன் மனைவியைக் கடிவாரோ
ச்சே..இருக்காது இது குழந்தை மேட்டர்
இருக்கும் பச்சைக்கிளி