கவிதைகள்
கவிதைகள்
எம். யுவன்
என் கை மந்திரக் கோல்
என் கை மந்திரக் கோலை
நீ அறியாய்
இங்கிருந்தவாறே
எங்கும் இருப்பேன்
இப்போதிலிருந்தபடி எப்
போதிலும் இருப்பேன்
மின்னல் கீறும்போது
தணலாவேன்
வான்திறந்து சொட்டும்
கருணைத் துளி
பட்டதும் குளிர்வேன்
எண்ணமொன்று கனக்கும்போது
கிண்ணென்று பாறையாய் இறுகிப்
பரிவாய் வருடும்
சிறுகாற்றில் சருகாகித்
தணிவேன்.
நீயென்ன செய்வாய்
நானறியேன்
எங்கு சென்றாலும்
இங்கேயே இருக்க
இயலலாம் உனக்கு. எப்போதில்
இரு