களஆய்வின் நிறைநிலை
களஆய்வின் நிறைநிலை
ந. ஜயபாஸ்கரன்
தங்களுடைய திறமையை எழுத்துக்கும் மேதைமையை உரையாடலுக்கும் வழங்கிவிட்டவர்கள் என்று ஆங்கிலக் கவிஞர்கள் கோல்ரிட்ஜ் பற்றியும் ஆஸ்கார் ஒயில்டு பற்றியும் சொல்லப்படுவது தொ.ப.வுக்கும் பொருந்தக்கூடியதே. சமயம் குறித்து சுந்தர்காளியுடன் தொ.ப. நிகழ்த்திய குறிப்பிடத்தகுந்த உரையாடலைத் தவிர்த்துப் பார்த்தால், நூல் வடிவம் பெறாதுபோன தொ.ப.வின் சம்பாஷணைகள் நிறையவே இருக்கக்கூடும். ‘எழுத்து முறையைப் பார்க்கிலும் வாய்மொழி மரபில் வந்த தமிழ்ப் புலமை நெறியின் வழி இது’ என்று ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுவது மிகச் சரியானதே. எழுத்து, அதிகாரத்தின் பிறப்பிடமாகத்தான் இருந்து வந்தி