கவிதைகள்
கவிதைகள்
செல்வசங்கரன்
சிறிய ரக பால்ரஸ் குண்டு
சிறிய ரக பால்ரஸ் குண்டை முழுங்கிவிட்டேன்
எப்படியோ கைக்குக் கிடைத்தது
கைகளில் இருந்தால் முழுங்கினால் என்ன எனத் தோன்றும்
வேறு எங்கு வைத்தாலுமே தேடி எடுத்துவிடுவேன்
அந்த பால்ரஸ் குண்டு அப்படிப்பட்டது
எடுக்க முடியாத இடம் வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை
டபக்கென வாயில் போட்டு முழுங்கிவிட்டேன்
கைகளில் இருந்தால் ஓயாது அரிப்பெடுக்கும்
ஒரு கையை இன்னொரு கையால் பிடித்து
அமுக்கிப் பிராண்டிக் கடித்து என்னோடே மல்லுக்கட்ட வேண்டி வரும்
இரண்டு கைகளையும் சேர்த்து மரத