தனித்து நிற்கும் திரைக் கலைஞர்
என்னுடைய படங்கள் ஒரு சட்டகத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதை வெளிப்படுத்துவதும் வெளிப்பாட்டுக்கான வடிவத்தைக் கண்டடைவதும்தான் ஒரே பிரச்சினை.
- இயக்குநர் ஆர்.வி. ரமணி
இந்த ஆண்டு தேர்வுக் குழுவில் விஷயம் தெரிந்த சிலர் இடம் பெற்றிருந்ததை அண்மையில் அறிவிக்கப்பட்ட சினிமா தேசிய விருதுகள் காட்டுகின்றன. இரு முடிவுகள் என் கவனத்தை ஈர்த்தன. ஒன்று அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் போன்ற முன்னிலை எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளைக் கரிசனத்துடன் படமாக்கியிருக்கும் வசந்த் எஸ். சாய்க்கும், இரண்டாவது ‘Oh, That is Bhanu&