கோத்திரங்களின் கதைசொல்லி…
கோத்திரங்களின் கதைசொல்லி என்று அறியப்படும், மலையாள நாவலாசிரியர் நாராயண் மறைந்தார். தனது 82 ஆம் வயதில், கொரோனா பாதித்த நிலையில் சிகிச்சையின்போது இறந்திருக்கிறார். இதுபோன்ற செய்திகளை அறிந்ததும் மனம் உடைந்து போகிற வழக்கம் தற்போது குறைந்து வருவதாக உணர முடிகிறது. மனம் கடினமாகி விட்டது; நெகிழ்வுத் தன்மை குறைந்துவிட்டதைப் போன்ற குற்றவுணர்ச்சிகள் ஏற்படாமலேயே இம்மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இயற்கை மரணமென்ற தலைப்பின் கீழ் அறியப்படும் வயதை நெருங்கிக்கொண்டிருப்பதும், சமூக ஊடகங்களின் பரவலும் அதிகரித்த நிலையில் வருகிற மரணச் செய்திகளின் எண்ணிக்கையால் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளதாகப் புரிந்துகொள்கிறேன்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள கடயத்தூர் மலையடிவாரத்