நல்ல துப்பாக்கி
நான் அறைக்குள் நுழைந்தபோது அல்ஹாஜி ஏகே 47 துப்பாக்கியை வேகமாகக் கழற்றிப் பூட்டிக்கொண்டிருந்தார். கைகள் துடிப்பு நிலையில் இருந்தாலும் உதட்டினால் சிரித்துக் கண்களால் அமரச் சொன்னார். அவருடைய மேசையிலும் சுற்றியுள்ள மரத்தட்டுகளிலும் சுவர்களிலும் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் காணப்பட்டன. என்பீல்ட், மகரொவ், ஏ.ஆர். 15, ரெமிங்டன் 870, கோல்ட் 45 இப்படிப் பலவகை. துப்பாக்கிகளுக்கு நடுவில் சுவரில் சில புகைப்படங்கள் தொங்கின; எல்லாமே இறந்துபோனவர்களின் படங்கள்.
கையிலிருந்த துப்பாக்கியைப் பூட்டிவிட்டு என்னைப் பெருமையுடன் பார்த்தார்.
“எவ்வளவு நேரம்?” என்று கேட்டேன்.
“வழக்கமாக 55 செகண்டுகள் எடுக்கும். இன்றைக்கு 50 செகண்ட்” என்றார்.
“எதற்காக இப்படிப் பாடுபட வேண்டும்? ஐந்து செகண்ட் பிந்திப் பூட்டினால் என்ன?” ‘
“இது எனக்கு நானே வைத்திருக்க