சுரா கடிதங்கள்
மதுரையில் வசிக்கும் சிவராமன், சுந்தர ராமசாமியின் நீண்டகால நண்பர்களில் ஒருவர். ‘க்ரியா’ பதிப்பகத்தின் தொடக்கம்முதல் அதனுடன் இணைந்து செயல்பட்டுவந்தவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவான வாசிப்புகொண்டவர். கறாரான விமர்சகர். 1979ஆம் ஆண்டுமுதல் சு.ரா.வுக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. அப்போது ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’ உள்ளிட்ட சு.ரா.வின் முக்கியமான படைப்புகள் பலவும் வெளியாகியிருக்கின்றன. இந்தக் காலகட்டத்தின் இலக்கியச் சலனங்கள், விவாதங்கள், ஆளுமைகள், க்ரியா பதிப்பகத்தின் செயல்பாடுகள் முதலானவை குறித்த முக்கியமான செய்திகள் இந்தக் கடிதங்களில் பதிவாகியிருக்கின்றன. நுட்பமான வாசிப்பில் உணர்ந்துகொள்ளத் தகுந்த பல்வேறு சங்கதிகளும் உள்ளன. சுந்தர ராமசாமி என்ற மனிதரையும் அவரது பார்வை, அணுகுமுறை இவற்றையும் இந்தக் கடிதங்கள் வழி அறியலாம்.
<p style=