தமிழின் செறிவுகளோடு ஒரு யாத்திரைஉறவின் கிள்ளிவிட முடியாத முளை
எங்கள் வீட்டிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கும்பாபிஷேம் நடந்து முடிந்தது. எனவே அக்கோவிலுக்குச் சென்று வரலாம் என்று நானும் அம்மாவும் மைதிலியும் மாமியாரும் புறப்பட்டோம். எங்களுக்குக் கோயிலைப் பற்றி விளக்கிச் சொல்வதற்காக அது பற்றி ஒரு நூலே எழுதியுள்ள அ.கா. பெருமாள் அவர்களும் எங்களுடன் வந்தார். காரை எடுத்து நிறுத்திவிட்டு எல்லாரும் ஏறிக்கொண்டிருக்கையில் தன்னிச்சையாகக் கைப்பேசியில் மின்னஞ்சலைப் பார்த்தேன். பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் இயக்குநரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்ததால் திறந்தேன். அவசரத்தில் பிரெஞ்சுத் தொடர்களைத் தவிர்த்துவிட்டு ஆங்கிலத்தை மட்டும் படித்தேன். விருது தருகிறார்கள் என்று புரிந்தது. காரில் இருந்தவர்களிடம் ‘Knight of the Order of the Merit’ விருது என்று வாசித்துச் சொல்லிவிட்டு, மூன்று நான்கு நெருங்கிய நண்பர்களுக்கு மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, வண்டியைச் செலுத்தத் தொடங்கினேன்.
<img alt="" src="/media/magazines/f4ad85be