தொன்மங்களை நவீனப்படுத்திய கவிஞர்
ஓவியம்: மு. சுந்தரம்
கவிஞர் சுகுமாரனின் முதல் கவிதை (1974) அச்சிதழில் வெளிவந்து ஏறக்குறைய ஐம்பதாண்டுகளைத் தொடப்போகின்றது. அவ்வகையில் கலை, இலக்கியத் தளங்களில் கவிஞர் சுகுமாரன் தடம் பதித்து அரை நூற்றாண்டை நெருங்க இருக்கிறார். கவிதை, புனைவு, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாளரென இலக்கியத்தின் பல பரிமாணங்களிலும் இயங்கி வருகிறார். இத்துறைகளில் கணிசமான பங்களிப்பையும் செய்திரு
க்கிறார். பல தளங்களில் இயங்கினாலும் கவிதையைத் தனது முகமாகக் கொண்டவர்; தன்னை வாசகனென்று அடையாளப்படுத்திக் கொள்வதில் மகிழ்பவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மூன்று மொழிகளின் இலக்கிய நகர்விலும் அரை நூற்றாண்டுகளாகத் தன்னைப் பொருத்திக்கொண்டு இயங்கிவருபவர்.
பணி நிமித்தமாக இந்தியா முழுக்கப் பயணம் செய்தவர் சுகுமாரன்; இலக்கியவாதிகளைத் தேடித் தேடிச் சந்தித்த