கருத்தாக்க அடர்வனத்தில் ஒரு பயணம்
கடந்த ஜூலை 26ஆம் தேதி மறைந்த வெங்கடேஷ் சக்ரவர்த்தி (70) குறித்துப் பல்வேறு அஞ்சலிக் குறிப்புகள் அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. நானும் ‘அருஞ்சொல்’ தளத்தில் எழுதியிருந்தேன். சென்னையில் ஒரு நினைவேந்தல் கூட்டமும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நிகழ்ந்தது. இந்தக் கட்டுரை அதன் தொடர்ச்சியாக சக்ரவர்த்தியின் அறிவார்த்தமான தனித்துவமிக்க பங்களிப்பைச் சிந்தித்துப் பார்க்கும் வகையில் எழுதப்படுகிறது. அதன் மூலம் சக்ரவர்த்தியின் சிந்தனைப் பயணத்தின் தடத்தை அடையாளம் காண்பதுடன், அந்தத் தடத்தில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டிய அவசியத்தையும் சிந்திக்கிறது.
மாறுபட்ட இந்திய/தமிழ் சினிமாவின் வரலாற்றைப் புரிந்துகொள்ள அந்த மேற்கத்தியக் கோட்பாடுகள் போதுமானவையா, பொருத்தமானவையா? நம் சினிமாவிற்கான கோட்பாடு தனியாக உருப்பெற வேண்டுமா? இவை மிகவும் சிக்கலான, அடர்த்தியான கேள்விகள். அ