தமிழ் சினிமாவின் முதன்மையான வரலாற்றாசிரியர்
தமிழ் இலக்கிய, பண்பாட்டுப் பரப்பில் நீண்டகாலமாகச் செயலாற்றிவரும் ஆளுமைகளில் 80 வயதைக் கடந்தவர் களின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகக் காலச்சுவடு வெளியிடும் தொடரின் நான்காவது கட்டுரை இது. சென்ற இதழில் பத்மநாப ஐயர் பற்றி மு. நித்தியானந்தன் எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. இந்த இதழில் திரை வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கரன் பற்றி
அம்ஷன் குமார் எழுதுகிறார்.
– பொறுப்பாசிரியர்
தியடோர் பாஸ்கரனின் ‘தி மெசேஜ் பேரர்ஸ்’ 1981 ஆம் ஆண்டு ‘க்ரியா’ வெளியீடாக வந்தது. அது உடனடியாகத் தமிழர்களின் கவனத்தைப் பெறவில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது முக்கியக் காரணம். ஆய்வு நூலாகவும் இருந்ததால் வாசகர்கள் அ