இவ்வுலகும் அவ்வுலகும் (தமிழ்ச் சமூக வரலாற்றில் சாதிக் கண்டனம்)
1968ஆம் ஆண்டு தெலுங்கில் ‘சதி அருந்ததி’ என்ற திரைப்படம் வெளியானது. அந்தப் படத்திற்கு ஆந்திரப் பகுதி தலித்துக்களிடையே எதிர்ப்பு எழுந்தது. ஏழு தலித் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திரச் சட்டப்பேரவையில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொணர்ந்தனர். இவ்வாறு போராட்டம் தந்த அழுத்தத்தின் காரணமாக அப்பிரச்சினைமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்றைய ஆந்திர முதலமைச்சர் பிரம்மானந்த ரெட்டி சட்டமன்றத்தில் உறுதியளித்தார். மகாபாரதக் கதையின்படி மதங்க முனிவரின் மகள் அருந்ததி. மதங்கனும் அருந்ததியும் மாதிகா என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு, தலித்துகளும் அவ்வாறே கருதிவந்திருக்கிறார்கள். அருந்ததியைத் தலித்துகள் மட்டுமன்றிப் பிற சாதியினரும் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்நிலையில்தான் சதி அருந்ததி படம் அருந்ததியை கவுதமர் என்கிற பிராமண முனிவருக்குப் பிறந்தவளாகக் காட்டியிருந்தது. தங்கள் அடையாளம் பிறராலும் வழிபடத்தக்கதாக, வழி