பாரதியின் “லோக குரு - 4” கண்டறியப்பட்ட மூலமும் காலமும்
1961ஆம் ஆண்டு சுதேசமித்திரன் நாளிதழில் பாரதி எழுதிய கட்டுரைத் தொடர் “லோக குரு” என்னும் தலைப்பில் அவ்வப்போது பகுதி பகுதியாக வெளிவந்தது. உலகிற்கு இந்தியா ஞானத்தை வழங்கும் லோக குரு; இந்தியாவின் பிரதிநிதிகளாக ஆன்மிகத்தில் விவேகானந்தரும் விஞ்ஞானத்தில் ஜகதீச சந்திர போஸும் இலக்கியத்தில் இரவீந்திர நாத தாகூரும் உலகளாவிய நிலையில் பயணங்கள் மேற்கொண்டு இந்திய ஞானத்தைப் பறைசாற்றுகின்றனர் என்பதை மையமாகக் கொண்டு இந்தத் தொடரைப் பாரதி எழுதினார்.
விவேகானந்தரைக் குறித்துக் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எழுதிப் போற்றியவர் பாரதி. ஜகதீச சந்திர போஸினைக் குறித்துப் “பாரதி அறுபத்தாறு” படைப்பிலும், ஜகதீச சந்திர போஸின் சொற்பொழிவைக் குறித்து “உயிரின் ஒலி” என்னும் கட்டுரை, “ஜீவ வாக்கு” என்னும் மொழிபெயர்ப்பு நூல், தனது சொற்பொழிவுகளில் எடுத்துரைத்தல் என்றெல