சல்மான் ருஷ்டி நூறாண்டு வாழ்க!
இந்த நாவலை ஆதரிப்பவர்கள் எப்படி அதைப் பாராட்டுவதற்கு உரிமை பெற்றவர்களோ அதைப் போன்றே இந்த நாவலை எதிர்ப்பவர்கள் நிச்சயமாக அதைப் பற்றி விமர்சிக்க உரிமை பெற்றவர்கள்தான். ஆனால் நகரத்தின் இயல்பு வாழ்வைக் குறிவைத்து, அதை மிரட்டிப் பணிய வைத்து நூலாசிரியருக்கு மிரட்டல் விடுவதென்பது அதற்கான வழியல்ல.’
‘மாதொருபாகன்’ வழக்கில் ஜூலை 5, 2016 அன்று சென்னை, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வாசகம்.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக ஒளிவு, அடைக்கலம், இடப்பெயர்வு என நிம்மதியற்ற வாழ்க்கையில் இருக்கும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிமீது இப்போது கொடூரத் தாக்குதல் நடந்திருக்கிறது. அவர் உயிருக்கு வைத்த குறி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சிறிதுகூட வன்மம் குறையாமல் உயிர்ப்போடு இருந்திருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்த இலக்கியக் கூ