செவாலியே கண்ணன்
அடைமொழி இல்லாமல் அழைத்தால் தன்னைத் தானா என்று சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகக் கண்ணனைச் சொல்லலாம். ‘காலச்சுவடு’ கண்ணன் என்பதே தமிழுலகில் அவருக்கு வாய்த்திருக்கும் அடையாளம். இந்த அடையாளத்தை பிரெஞ்சு அரசாங்கம் மேலும் பிரகாசமாக்கியிருக்கிறது. இனி அவர் ‘செவாலியே’ கண்ணன்.
பிரெஞ்சு அரசின் உயர்மதிப்புள்ள செவாலியே (Knight of the order of merit) விருது கண்ணனுக்கு வழங்கப்பட விருக்கிறது. தமிழ்ப் பதிப்பாளர் ஒருவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது முன்னுதாரணமற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இதற்குக் கண்ணன் முற்றிலும் தகுதியானவர் என்பதை அவரது முப்பதாண்டுகளுக்கும் மேற்பட்ட அவரது செயல்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்ப் பதிப்புத் துறையில் மாற்றங்களையும் புதுமைகளையும் நடைமுறைப்படுத்தியதில் காலச்சுவடு பதிப்பகத்துக்குக் கணிசமான பங்கு உண்டு; அதைச்