சாத்தானின் வேலை இன்னும் ஓயவில்லை
எனக்கு ஞாபகம் இருக்கிறது, சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் செய்யுள்’ நூலை எங்கே வாங்கினேன் என்று. பெர்மீங்கம் ராக்கம்ஸ் என்ற உயர் சந்தைப் பல்பொருள் அங்காடியில் இருந்த புத்தகக்கடையில். ஆள் தோற்ற வடிவாக்கம் செய்தல் இன்னும் ஊடகச் சொல்லாடலில் வரவில்லை. ஆனாலும் விற்பனை செய்தவர் என்னை ஊடொளிக் கூர்மையுடன் மேலும் கீழும் பார்த்தார். என்னுடைய தாடியில்லாத் தோற்றம் அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கையைத் தந்திருக்க வேண்டும். புத்தகக் கடைகள் எப்போதும் தாக்கப்படலாம் என்ற காரணத்தினால் ‘சாத்தானின் செய்யுள்’ வெளிப்படையாக வாசகர்களின் பார்வைக்கு அலுமாரியில் வைக்கப்படவில்லை. எனக்கு நூலை விற்பனை செய்தவர் உள்ளே போய் ஏதோ கள்ளக்கடத்தல் பொருளைக் கையாளுவதுபோல் என்னிடம் தந்தார். இன்றைக்கு பெர்மீங்கம் ராக்கம்ஸ் புத்தகக் கடை இல்லை. புத்தகம் இருக்கிறது. புத்தகத்தை எழுதியவர் உயிருடன் இருக்கப் போராடிக்கொண