ஈழ ஆஸ்திரேலிய நாடகம்: “எண்ணிக்கை இல்லையெல் கையோங்கு”
தலில் இந்த நாடகத்தின் ‘எண்ணிக்கை இல்லையேல் கையோங்கு’ என்ற தலைப்புப் பற்றி. இது ‘Counting and Cracking’ என்ற ஆங்கில வரிகளின் தமிழாக்கம். இந்த ஆங்கிலத் திருப்புதல் பற்றி ஷோபாசக்தியுடன் கதைத்தபோது நேரான சொல் அர்த்தத்தில் ‘எண்ணுதலும் சிதைத்தலும்’ பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர் தன்னுடைய விழிப்பான நடையில் ‘எண்ணும் எதிர்ப்பும்’ என்று சொன்னார்.
இந்த நாடகத்தின் தலைப்பு தமிழ் அரசியல்வாதியும் கல்விமானுமான செல்லப்பா சுந்தரலிங்கம் தன்னுடைய மகன் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் வருகிறது. ‘ஜனநாயகம், குறிப்பிட்ட வரம்புகளுக்குள் தலைகளை எண்ணுவதும், அந்த வரம்புகளுக்கு அப்பால் தலைகளை உடைப்பதும் ஆகும்.’ காலனிய வியாபாரச் சரக்குகளான ஒஸ்டின் ஏ40 சீருந்துகள், சிங்கர் தையல் இயந்திரங்களைப் பாவித்த ஒரு காலத்து ஈழத் தமிழர்களுக்கு சுந்தரலிங்கமும் அவருடைய கவலையானதும் குழப்பமானது